தேசியம்
செய்திகள்

March 2023க்குள் 75 சதவீத கனடியர்கள் COVID தொற்றால் பாதிப்பு

March மாதம் 2023ஆம் ஆண்டுக்குள் 75 சதவீத கனடியர்கள் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

COVID நோய் எதிர்ப்பு சக்தி பணிக்குழு (COVID Immunity Task Force – CITF) ஆராய்ச்சியாளர்கள், ஏழு ஆராய்ச்சி ஆய்வுகளுடன் இணைந்து வெளியிட்ட ஆய்வில் இந்த் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கனடிய மருத்துவ சங்கத்தின் (Canadian Medical Association j) இதழில் இந்த கண்டுபிடிப்பு கடந்த திங்கட்கிழமை (14) வெளியானது.

கனேடிய மக்கள்தொகையின் தொற்று, தடுப்பூசியின் போக்குகளை ஆராய்ச்சியாளர்கள் மூன்று கட்டங்களில் ஆய்வு செய்தனர்.

தடுப்பூசிக்கு முந்தைய காலம் (March முதல் November 2020), தடுப்பூசி வெளியான காலம் (December 2020 முதல் November 2021), Omicron மாறுபாட்டின் வருகை காலம் (December 2021 முதல் March 2023) ஆகிய மூன்று கட்டங்களில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

கால-தொடர் அணுகுமுறையைப் பயன்படுத்தி புவியியல் பகுதி, வயதின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் தொற்று விகிதங்களையும் அளந்தனர்.

10 மாகாணங்களில் இருந்து 900,000க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நபர்களின் மாதிரிகளிலிருந்து இந்த தரவுகள் பெறப்பட்டன.

Related posts

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Quebec புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்தது

Lankathas Pathmanathan

அவசியமானது: அவசரகாலச் சட்டத்தை நியாயப்படுத்திய பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment