December 12, 2024
தேசியம்
செய்திகள்

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 13 பேர் கைது

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 13 பேரை Akwesasne காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் 13 பேரை அண்மையில் கைது செய்ததாக Akwesasne Mohawk காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (05) இந்த சந்தேக நபர்கள் குறித்து தக்கல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

நான்கு பேர் கொண்ட குடும்பம் சாலையில் நடந்து செல்வதையும், ஒன்பது பேர் கொண்ட மற்றொரு குடும்பம் ஒரு தனியார் வீட்டில் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அமெரிக்கப் பகுதியில் காணப்பட்ட இவர்கள் அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு கனடிய காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்

Akwesasne கடற்பரப்பில் கடந்த March மாதம் கவிழ்ந்த படகுக்கு அருகில் எட்டு இந்திய, ருமேனிய குடியேறியவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

Related posts

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளை இறக்குமதி செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan

உடல் செயல்பாடின்மை காரணமாக அதிகரிக்கும் சுகாதார பராமரிப்பு செலவுகள்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு விமானப் பயணத்திற்கான சோதனையை மீண்டும் ஆரம்பிக்கும் கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment