பிரதமர் Justin Trudeauவும் அவரது மனைவி Sophie Gregoire Trudeauவும் தமது திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர்.
தமது 18 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுத்துள்ளதாக புதன்கிழமை (02) அவர்கள் இருவரும் தமது சமுக வலைதளத்தில் அறிவித்தனர்.
பல அர்த்தமுள்ள, கடினமான உரையாடல்களின் பின்னர் பிரிவதற்கான இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒரு அறிக்கையில் இருவரும் தெரிவித்தனர்.
தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, இந்த நேரத்தில் தமது குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு கனடியர்களை அவர்கள் கோரியுள்ளனர்.
இவர்களுக்கு 15 வயதான Xavier, 14 வயதான Ella-Grace, 9 வயதான Hadrien என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் சட்டப்படி பிரிந்து செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.