தேசியம்
செய்திகள்

கனடாவில் அனைத்து செய்திகளையும் அடுத்த சில வாரங்களுக்குள் அகற்ற Meta முடிவு

கனடாவில் உள்ள அனைத்து செய்திகளும் அடுத்த சில வாரங்களுக்குள் Facebook, Instagram தளங்களில் இருந்து அகற்றப்படும் என Meta தெரிவித்தது.

கனடாவில் செய்திகளின் பகிர்தல் அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொள்ளப்படுவதாக Meta அறிவித்தது.

அடுத்த சில வாரங்களுக்குள், அதன் பிரபலமான Facebook, Instagram தளங்களின் அனைத்து கனேடிய பயனர்களுக்கும் செய்திகளை அகற்றும் என Meta செவ்வாய்கிழமை கூறியது.

ஐந்து சதவீத பயனர்களுக்கு மட்டுமே செய்திகளை வரையறுக்கும் ஒரு சோதனையை கடந்த June மாதத்தில், Meta நிறுவனம் ஆரம்பித்தது.

தற்போது சோதனைக் கட்டத்தில் இருந்து நகர்வதாக Meta கூறுகிறது.

கனடாவில் நிரந்தரமாக செய்திகள் கிடைப்பதை நிறுத்துவதற்கான செயல்முறையை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்” என Meta கனடாவின் பொதுக் கொள்கைத் தலைவர் Rachel Curran கூறினார்.

எங்கள் தளங்களைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான கனடியர்கள், வணிகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவித்தல் வெளியாவதாக அவர் தெரிவித்தார்.

Rachel Curran முன்னர் முன்னாள் பிரதமர் Stephen Harperரின் கொள்கை ஆலோசகராக பணியாற்றியவர்.

இந்த நகர்வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடிய மத்திய அரசும் சில நிறுவனங்களும் ஏற்கனவே Metaவுடன் விளம்பர ஒப்பந்தங்களை முடித்துக் கொண்டன.

Related posts

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை Ontarioவில் 3,000ஐ தாண்டலாம் !

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

Lankathas Pathmanathan

நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் NPDயின் முடிவு குறித்து ஆச்சரியம்

Lankathas Pathmanathan

Leave a Comment