Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக புதன்கிழமை (26) பதவியேற்றார்.
பிரதமர் Justin Trudeau அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார்.
இதில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றார்.
திருக்குறளை உபயோகித்து அவர் பதவி ஏற்றுள்ளார்.
இதன் மூலம் ஈழ தமிழ் வம்சாவளியை சேர்ந்த முதலாவது தமிழ் அமைச்சர் கனடாவில் பதவியேற்றுள்ளார்.