தேசியம்
செய்திகள்

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்கு அழைக்கப்பட மாட்டார்?

இஸ்ரேலிய பிரதமரை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள அழைக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அவரை கனடாவுக்கு பயணம் செய்ய அழைப்பதற்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை என பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (20) கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வந்த நிலையில், விரைவில் இஸ்ரேல் பிரதமர் கனடிய பிரதமருடன் பேச உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேலில் அதிகரித்து வரும் வன்முறை, நீதித்துறை சீர்திருத்தம் குறித்து கனடா கவலை தெரிவித்து வருகிறது.

Related posts

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment