பணவீக்க விகித குறைவை ஒரு முக்கியமான தருணம் என நிதி அமைச்சர் Chrystia Freeland விவரித்தார்.
கனடாவின் பணவீக்க விகிதம் June மாதத்தில் 2.8 சதவீதமாக குறைந்தது.
வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 3.4 சதவீதமாக இருந்தது.
இறுதியாக பணவீக்க விகிதம் மூன்று சதவீதத்திற்கும் கீழே சரிந்தது, March மாதம் 2021ஆம் ஆண்டாகும்.
இந்த நிலையில் கனடாவில் பணவீக்கம் ஏனைய G7 நாடுகளையும் விட இப்போது குறைவாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சரிவு கனடியர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என Chrystia Freeland நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தியாவில் நடைபெறும் G20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற Chrystia Freeland அங்கிருந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்தை தெரிவித்தார்.