December 12, 2024
தேசியம்
செய்திகள்

கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தினத்தை கனேடிய தமிழர்கள் நினைவேந்தல்

கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தின வார ஆரம்பத்தை கனேடிய தமிழர்கள் வியாழக்கிழமை (13) நினைவேந்தினர்.

Nova Scotia மாகாணத்தின் Halifax நகரில் Pier 21 கனேடிய குடிவரவு அரும்பொருட் காட்சியகத்தில் இந்த நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை தலைநகரில் நிகழ்ந்த வன்முறையில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டதுடன் பல மில்லியன் ரூபா பெறுமதியான வணிக நிறுவனங்களும், வாழ்வாதாரமும் இழக்கப்பட்டது.

இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் இலங்கைதீவிலிருந்து
இடம்பெயர்க்கப்பட்டனர்.

இந்த கருப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவு கூறும் இந்த நிகழ்வில் கனேடிய குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி அனந்தசங்கரி உட்பட பலரும் உரையாற்றினர்.

கறுப்பு ஜூலையின் பின்னர் குடிவரவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் திட்டம் ஒன்றின் மூலம் கனடா, 1,800க்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் குடியேறுவதற்கு வழிவகுத்தது என இந்த நிகழ்வில் உரையாற்றிய கரி அனந்தசங்கரி கூறினார்.

Related posts

Ontario அமைச்சரவையின் சட்டமன்ற உதவியாளர்களாக இரண்டு தமிழர்கள் நியமனம்

Ottawaவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

Lankathas Pathmanathan

சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊகத்தை நிராகரித்த Vancouver நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment