Ottawaவை வியாழக்கிழமை (13) ஒரு சூறாவளி தாக்கியுள்ளது.
இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்ததுடன், வீடுகள் பலவும் சேதமடைந்தன
வியாழன் மதியம் Ottawaவை தாக்கிய சூறாவளியினால் குறைந்தது 125 வீடுகள் சேதமடைந்தன.
இந்த புயல் காரணமாக ஒருவர் மட்டும் சிறிய காயங்களுக்கு உள்ளானர்.
சுற்றுச்சூழல் கனடா Ottawaவிற்கு சூறாவளி எச்சரிக்கையை வியாழக்கிழமை விடுத்தது.
வியாழன் மாலை இந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.