British Columbia மாகாணத்தின் காட்டுத்தீக்கு எதிராக போராட மேலதிக தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.
இதில் ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.
மாகாணத்தின் அவசர மேலாண்மை அமைச்சர் Bowinn Ma இந்த கோரிக்கையை முன்வைத்தார்
British Columbia மாகாணத்தில் 350 வரையிலான காட்டுத்தீ தொடர்ந்தும் எரிந்து வருகிறது.
இதில் உதவுவதற்கு மத்திய அமைச்சர் Bill Blairரிடம் உரையாடியுள்ளதாக மாகாண அமைச்சர் Bowinn Ma வியாழக்கிழமை (13) கூறினார்.