தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி

Opioid நெருக்கடியில் உள்ள முதற்குடி சமூகங்களுக்கு உதவ மத்திய அரசாங்கத்திடம் Alberta மாகாணம் அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு அதன் அதிகார வரம்பில் உள்ள பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வியடைவதாக Alberta முதல்வர் Danielle Smith கூறினார்.

செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமான மாகாண முதல்வர்கள் வருடாந்த மாநாட்டில் Alberta முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மத்திய அரசாங்கம் தனது அதிகார வரம்பில் உள்ள விடயங்களில் கவனம் செலுத்துவதை விட மாகாண அதிகார வரம்பில் உள்ள பிரச்சினைகளில் தலையிடுவதால் மாகாண முதல்வர்கள் விரக்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பில் மத்திய அரசு உதவ முடியும் எனவும் Alberta முதல்வர் கூறினார்.

Related posts

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய  தூதுவர்!

Gaya Raja

Ontarioவில் மூன்று வாரங்களில் முதல் முறையாக 200க்கும் அதிகமான தொற்றுக்கள் !

Gaya Raja

வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment