கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதை அனைத்து நாடுகள் தவிர்க்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்.
ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு உதவுவதற்காக அமெரிக்கா, கொத்துக் குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கனடிய பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
உலகம் முழுவதும் கொத்துக் குண்டுகளை தடை செய்ய வழிவகுத்த நாடுகளில் கனடாவும் ஒன்றாகும் என திங்கட்கிழமை (10) Justin Trudeau நினைவுபடுத்தினார்.
அவை பயன்படுத்தப்பட கூடாது என்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம் என பிரதமர் கூறினார்.
NATO உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உட்பட, உலகெங்கிலும் உள்ள மொத்தம் 123 நாடுகள், கொத்துக் குண்டுகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.