Digital வரிக்கான திட்டங்களை கைவிடுமாறு கனடாவை அமெரிக்கா வலியுறுத்துகிறது.
கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng வெள்ளிக்கிழமை (07) அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி Katherine Taiயை Mexicoவில் சந்தித்தார்.
இரண்டு நாட்கள் தொடர்ந்த சந்திப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் வருடாந்தம் இந்த சந்திப்பை முன்னெடுக்கின்றன.
இந்த சந்திப்புகளில் மூன்று நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.