தேசியம்
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 151 தென் கொரியா தீயணைப்பு படையினர் கனடாவில்

தென் கொரியா 151 தீயணைப்பு படையினரை கனடாவுக்கு அனுப்புகிறது.

இவர்கள் நாடு முழுவதும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடும் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தீயணைப்பு படையினருடன் இணையவுள்ளனர்.

இந்த தீயணைப்பு படையினர் Quebec மாகாணத்தில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தப் போராட 30 நாட்கள் பணியில் இருப்பார்கள் என கனடாவில் உள்ள கொரிய தூதரகம் கூறியது.

வரலாற்று ரீதியில் கனடா தனது மோசமான காட்டுத்தீயை இம்முறை எதிர்கொள்கிறது.

இதனை கட்டுப்படுத்த ஐந்து கண்டங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் கனடாவை வந்தடைந்துள்ளனர்.

Related posts

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

Markham நகரில் தமிழர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் பொதுத் துறை பணியாளர்கள் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Leave a Comment