தேசியம்
செய்திகள்

Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

Scarborough – Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள Ontario மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதிக்கான இடைதேர்தல் July மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தட்ஷா நவநீதன் அறிவிக்கப்பட்டார்.

Scarborough – Guildwood தொகுதியில் எங்கள் வேட்பாளராக தட்ஷா நவநீதனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என Ontario NDP தலைவர் Marit Stiles தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (30) காலை இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சனிக்கிழமை (01) நடைபெறும் வேட்பு மனு கூட்டத்தில் Scarborough – Guildwood தொகுதி கட்சி உறுப்பினர்களால் இந்த நியமனம் உறுதி செய்யப்படும் என NDP கட்சி தெரிவித்தது.

Related posts

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

Gaya Raja

இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது: Ontario கல்வி அமைச்சர் உறுதி

Lankathas Pathmanathan

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment