NATO இராணுவ செலவின இலக்கை எட்டுமாறு கனடாவை இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்துகின்றார்.
இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர், கனேடிய பாதுகாப்பு அமைச்சரை வியாழக்கிழமை (29) சந்தித்தார்.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த வாரம் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
லிதுவேனியாவின் தலைநகரில் எதிர்வரும் 11,12ஆம் திகதிகளில் NATO தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் NATO பாதுகாப்பு முதலீடுகள் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து NATO உறுப்பினர்களும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை தங்கள் இராணுவங்களுக்கு செலவிட 2014இல் இணக்கம் காணப்பட்டது.
ஆனாலும் கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.29 சதவீதத்தை 2022ல் பாதுகாப்புக்காக செலவிட்டுள்ளது.