February 23, 2025
தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Toronto நகர முதல்வர் பதவியை Olivia Chow எதிர்வரும் 12ஆம் திகதி ஏற்கவுள்ளார்.

Torontoவின் 66ஆவது நகர முதல்வராக Olivia Chow திங்கட்கிழமை (26) தெரிவானார்.

இதன் மூலம் Toronto நகரசபையில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படுகிறது.

இந்த தேர்தலில் 37 சதவீதம் வரையிலான வாக்குகளை Olivia Chow, 32 சதவீதமான வாக்குகளை Ana Bailao பெற்றனர்.

இந்த தேர்தலில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 372 வாக்குகளை Olivia Chow பெற்றார்.

Ana Bailao 2 இலட்சத்து 35 ஆயிரத்து 175 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்

இந்த எண்ணிக்கை அதிகாரபூர்வமற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் புதன்கிழமை (28) உறுதிப்படுத்தப்படும்.

கனடிய வரலாற்றில் மிகப் பெரிய இடைத் தேர்தலாக இந்த தேர்தல் வர்ணிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் 39 சதவீத வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Ripudaman Singh Malik கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு!

Lankathas Pathmanathan

Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு $25 மில்லியன் திரட்டப்பட்டது

Lankathas Pathmanathan

நான்கு பேர் பலியான Hamilton  தீ தடுக்கப்பட்டிருக்கக் கூடியது!

Lankathas Pathmanathan

Leave a Comment