கனடிய மத்திய வங்கி அடுத்த மாதத்தில் மற்றொரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்க விகிதம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இந்த வட்ட விகித அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கத்தில் சரிவு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.
May மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையை புள்ளிவிவரத் திணைக்களம் எதிர்வரும் புதன்கிழமை (28) வெளியிட உள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுக்கு முன்னதாக, நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கை வெளியாகிறது.