தேசியம்
செய்திகள்

கனடிய விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை விரைவில்?

கனடிய விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து சுதந்திரமான பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அறிவித்தல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சிகளின் கோரிக்கையை பல மாதங்கள் நிராகரித்து வந்த நிலையில், தற்போது பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுடன் Liberal அரசாங்கத்தின் பேச்சு வார்த்தைகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

Conservatives, NDP, Bloc Quebecois தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் வகையில் தொடர்வதாக அரசாங்கத்தின் நாடாளுமன்ற சபைத் தலைவர் Mark Holland புதன்கிழமை (21) கூறினார்.

ஆனாலும் பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துள்ளார்.

அரசாங்கம் பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்க ஒப்புக்கொள்ளும் நிலையில், கோடை கால நாடாளுமன்ற அமர்வின் நிறைவின் முன்னர் சில சட்ட மூலங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து சுதந்திரமான பொது விசாரணைக்கு அரசாங்கம் விரைவில் அழைப்பு விடுக்கும் என Bloc Quebecois நம்பிக்கை தெரிவித்தது.

பிரதமர் Justin Trudeau வெளிநாட்டு தலையீடு குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பார் என Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet நம்பிக்கை தெரிவித்தார்.

கனடிய விவகாரங்களில் சீன அரசாங்கம் தலையிட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும் என அவர் பரிந்துரைத்தார்.

ஆனால் இந்த விசாரணை அதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது என கூறப்படுகிறது.

Related posts

கனடாவின் தடுப்பூசி வழங்கும் உத்தியால் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைகிறது: பிரதமர்

Gaya Raja

நாளை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

Lankathas Pathmanathan

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது நபர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment