நெடுந்தெரு 401இல் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
Ontario மாகாணத்தின் Pickering நகரில் செவ்வாய்கிழமை (20) இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.
நெடுந்தெரு 401இல் மூன்று வாகனங்கள் மோதியதில் பல வெடிப்புகள், தீ விபத்துகள் ஏற்பட்டதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்தது.
அதிகம் எரியக்கூடிய திரவத்துடன் பயணித்த tanker truck ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாதை மாறி பயணித்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து காரணமாக tanker truck, ஒரு தீப்பந்தமாக வெடித்து, தீப்பிழம்புகள் எதிரே பயணித்த போக்குவரத்து truck, பயணிகள் வாகனத்திற்கு பரவியதாக OPP பேச்சாளர் தெரிவித்தார்
விபத்துக்குள்ளான இரண்டு போக்குவரத்து truck சாரதிகளும் சம்பவ இடத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் அந்த பகுதியில் நெடுந்தெரு 401 காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.