தேசியம்
செய்திகள்

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Toronto நகர முதல்வர் தேர்தலில் முன்னாள் நகர முதல்வர் John Tory, வேட்பாளர் Ana Bailãoவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த நகரத்தை முன்னோக்கி வழிநடத்துவதற்கு ஒரு சிறந்த தேர்வு Ana Bailão என ஒரு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் John Tory குறிப்பிட்டார்.

தற்போதைய துணை நகர முதல்வர் Jennifer McKelvie உட்பட ஒன்பது நகரசபை உறுப்பினர்கள் Ana Bailãoவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

Ana Bailão, நகர முதல்வர் John Toryயின் கீழ் துணை நகர முதல்வராக முன்னர் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

102 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் கருத்து கணிப்புகள் தொடர்ந்தும் Olivia Chowக்கும் ஆதரவாக உள்ளன.

இந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் அவரது ஆதரவு 30 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதை சுட்டிக் காட்டுகின்றன.

Toronto நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

Related posts

70வது NATO அமர்வு கனடாவில்

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய தொற்றுக்கள்

Gaya Raja

Durham தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment