தேசியம்
செய்திகள்

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Ontario மாகாணத்தில் காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

York பிராந்திய காவல்துறையினர் இந்த உதவியை பொதுமக்களிடமிருந்து நாடியுள்ளனர்.

43 வயதான திவாகர் பரம்சோதி என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Vaughan நகரை சேர்ந்த இவர், இறுதியாக திங்கட்கிழமை (19) மாலை 6 மணியளவில் தனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பின்னர் குடும்பத்தினர், காவல்துறையினர் அவரை தொடர்புகொள்ள முன்னெடுத்த முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன.

Brampton நகரில் கடமையாற்றும் இவர், இறுதியாக Toronto நகர மத்திய பகுதியில்
திங்கள் மாலை இருந்துள்ளார் என தெரிய வருகிறது.

இவரது நலன் குறித்து கவலை வெளியிட்ட காவல்துறையினர் இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கோருகின்றனர்.

Related posts

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan

Air Canadaவுக்கு கனடிய அரசாங்கத்தின் உதவித் திட்டம்!

Gaya Raja

Leave a Comment