December 12, 2024
தேசியம்
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில்

Manitobaவில் வியாழக்கிழமை (15) நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (16) மாலை தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் நான்கு பேர் அறுவை சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் 60 முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து RCMP தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விபத்தில் பலியான 15 பேரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் முயற்சியில் RCMP தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் அல்லது சூழ்நிலைகள் குறித்து கருத்து தெரிவிக்க RCMP மறுத்துள்ளது.

விசாரணை தொடரும் நிலையில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சாத்தியமானவை என தெரியவருகிறது

Related posts

British Colombia வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயம்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja

மத்திய அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி!

Gaya Raja

Leave a Comment