தேசியம்
செய்திகள்

Alberta முதல்வரின் Facebook பக்கம் முடக்கம்?

Alberta முதல்வரின் Facebook பக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

தனது Facebook பக்கத்தில் பதிவிடுவதற்கு சில நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் Danielle Smith கூறினார்.

இதனை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசாங்கங்களின் தணிக்கை என அவர் வர்ணித்தார்.

இந்த தணிக்கை உலகம் முழுவதும் பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்தாக மாறி வருவதாகவும் அவர் கூறினார்.

அரசியல் நிலைப்பாடுகள் கடந்து அனைவரும் இது போன்ற தணிக்கைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என முதல்வர் Danielle Smith ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆனாலும் முதல்வரின் Facebook பக்கம் இடைநிறுத்தப்பட வில்லை என Facebook அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாறாக அவரது Facebook பக்கத்தின் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரின் பக்கத்தில் பதிவிடுவதற்கு தடைகள் எதுவும் இல்லை எனவும் Facebook தெரிவிக்கிறது.

Related posts

சீனா சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் வரவேற்ற கனேடிய பிரதமர்!

Gaya Raja

கனடா எல்லையில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்கிறது

Gaya Raja

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Leave a Comment