February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebec பேருந்து விபத்தில் நால்வர் காயம்

Quebec பாடசாலை பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்தனர்.

ஆரம்ப பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் போது இந்த விபத்து திங்கட்கிழமை (12) நிகழ்ந்தது.

இந்த விபத்தின் போது பேருந்தில் ஏழு முதல் 13 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகள் பயணித்தனர்.

மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எட்டு குழந்தைகள் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூவர் விமானம் மூலம் Montreal குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வாகன ஓட்டுநர் Quebec நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும்: Chrystia Freeland

Haiti இல் கடத்தப்பட்டவர்களில் கனேடியர் ஒருவரும் அடங்கல் !

Gaya Raja

Leave a Comment