தேசியம்
செய்திகள்

Ontario Liberal தலைமைக்கு போட்டியிடும் அறிவிப்பை புதன்கிழமை வெளியிடும் Bonnie Crombie?

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடுவது குறித்த அறிவிப்பை Mississauga நகர முதல்வர் Bonnie Crombie புதன்கிழமை (14) வெளியிடவுள்ளார்.

63 வயதான Bonnie Crombie, தலைமைப் பதவிக்கு போட்டியிட தனது பெயரை முறையாக பதிவு செய்வார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

தனது தேர்தலுக்கான ஒரு ஆய்வுக் குழுவை Bonnie Crombie அமைத்திருந்தார்.

தலைமைப் பதவிக்கு போட்டியிடும் Mississauga நகர முதல்வரின் முடிவை Ontario முதல்வர் Doug Ford விமர்சித்திருந்தார்.

ஏற்கனவே Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்று வேட்பாளர் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

கட்சி உறுப்பினர்கள் November 25, 26 ஆம் திகதிகளில் புதிய தலைவருக்கு வாக்களிக்கவுள்ளனர்.

Ontario Liberal புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan

Ontarioவில் புதிய குறுஞ்செய்தி மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் முதல்வர் Doug Ford அதிரடி மாற்றம்!

Lankathas Pathmanathan

Leave a Comment