ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 350 தீயணைப்பு படையினர் கனடிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ உள்ளனர்.
இவர்கள் Quebec கில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
பிரான்சில் இருந்து நூற்று ஒன்பது தீயணைப்பு படையினர் கடந்த வியாழக்கிழமை (08) கனடாவை வந்தடைந்தனர்.
இவர்களும் வார இறுதியில் Quebec கில் தீயணைப்பு பணிகளை முன்னெடுத்தனர்.
போர்ச்சுகலில் இருந்து மேலும் 140, ஸ்பெயினில் இருந்து 97 தீயணைப்பு படையினர் நாளை புதன்கிழமை (14) Quebec நகரை வந்தடைய உள்ளனர்.