February 23, 2025
தேசியம்
செய்திகள்

13ஆம் திகதி வரை Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வியாழக்கிழமை (08) ஆரம்பமானது.

வியாழன் ஆரம்பமான முன்கூட்டிய வாக்களிப்பு 13ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

நகரம் முழுவதும் உள்ள 50 வாக்களிக்கும் நிலையங்களில் முன்கூட்டிய வாக்களிப்பு இடம்பெறுகிறது.

இந்த தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு June மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஏனைய வேட்பாளர்களை விட Olivia Chow தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக அண்மைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

Related posts

வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Lankathas Pathmanathan

B.C. விமான விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan

Trudeau – Biden முதல் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment