காற்றின் தர எச்சரிக்கைகள் கனடாவின் பெரும்பகுதியை தொடர்ந்து பாதிக்கிறது.
நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் தொடர்கிறது
கனடாவில் அனைத்து பகுதிகளும், மத்திய அரசாங்கத்தின் வெப்ப எச்சரிக்கை அல்லது காற்றின் தர எச்சரிக்கையின் கீழ் தொடர்ந்தும் உள்ளது.
காற்றின் தரத்தில் கனடிய வரலாற்றில் மிக மோசமான நாட்களில் ஒன்றை புதன்கிழமை (07) பதிவு செய்தது.
Toronto பெரும்பாகம், Niagara பகுதி, தென்மேற்கு Ontarioவில் காற்றின் தர அபாயங்கள் வார இறுதியில் அதிகரிக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் கனடாவின் காற்றின் தர சுகாதாரக் குறியீடு, Ottawa, Gatineau நகரங்களில் தொடர்ந்தும் கனடாவில் மிக மோசமான அபாய எச்சரிக்கையை வியாழக்கிழமை (08) பதிவு செய்துள்ளது.
British Columbia, Alberta மாகாணங்களின் பல சமூகங்களிலும் காற்றின் தர சுகாதாரக் குறியீடு அபாய நிலையில் வியாழனன்று பதிவானது.