தேசியம்
செய்திகள்

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலத்தை Ontario அரசாங்கம் நிறைவேற்றியது.

Hazel McCallion Act என்ற இந்த சட்ட மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் Peel பிராந்தியத்தை கலைத்துவிடும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சட்டமூலம் Ontario சட்டசபையில் செவ்வாய்க்கிழமை (06) மூன்றாவது வாசிப்பை நிறைவேற்றியது.

ஆளுநர் நாயகத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இது சட்டமாகும்.

இந்த அங்கீகாரம் இந்த வார இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டமூலம் Mississauga, Brampton, Caledon ஆகிய நகரங்கள் பிராந்திய ஆளுகையில் இருந்து சுயாதீனமாக இயங்க வழி செய்கிறது.

Related posts

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja

சீனாவுக்கான சேவையை அதிகரிக்க Air கனடா முடிவு

Lankathas Pathmanathan

கனடா குடியேற்றத்தைக் கையாளும் விதத்தில் COVID நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment