February 22, 2025
தேசியம்
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார்: Justin Trudeau

கனடாவின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார் என பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (02) உறுதிப்படுத்தினார்.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் David Johnston அவரது பதவியில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக இந்த வாரம் வாக்களித்தனர்.

NDP முன்வைத்த தீர்மானம் Conservative, Bloc Quebecois நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை வெளிநாட்டு தலையீடு தொடர்பாக பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு அரசாங்கத்தை கோருகிறது.

இந்த நிலையில் David Johnstonனின் பதவி விலகலை Conservative தலைவர் Pierre Poilievre வெள்ளியன்று மீண்டும் வலியுறுத்தினார்

ஆனாலும் David Johnston மீதான தனது நம்பிக்கையை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழ்மை மீண்டும் உறுதிப்படுத்தினார்

எதிர்வரும் மாதங்களில் David Johnston நாடு முழுவதும் முன்னெடுக்கும் பொது விசாரணைகளை எதிர்பார்த்திருப்பதாக Justin Trudeau கூறினார்.

இந்த விசாரணைகளை தொடர்ந்து October இறுதிக்குள் David Johnston இறுதி அறிக்கையை வெளியிடவுள்ளார்.

Related posts

70 மில்லியன் டொலர்களை வெற்றி பெற்ற தமிழர்

Lankathas Pathmanathan

Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

திருத்தந்தையின் வருகை நல்லிணக்கத்திற்கும் மாற்றத்திற்கும் இடமளிக்கிறது: முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment