கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து David Johnston விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
David Johnston பதவி விலக வேண்டும் என கோரும் பிரேரணையை NDP நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.
இந்த பிரேரணை மீதான வாக்களிப்பு புதன்கிழமை (31) நடைபெற்றது.
இந்த பிரேரணை 174க்கு 150 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணையில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த ஒரு பொது விசாரணை அவசரமாக முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனாலும் பதவியில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை David Johnston நிராகரித்தார்.