தேசியம்
செய்திகள்

அரசாங்கத்துடன் NDP ஒப்பந்தம் முடிவுக்கு வராது: NDP தலைவர்

Liberal அரசாங்கத்துடனான தனது கட்சியின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அழைப்புகளை NDP தலைவர் நிராகரிக்கிறார்.

மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட வேண்டும் என Jagmeet Singh தெரிவித்தார்.

சீனாவின் வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக தேர்தலை கட்டாயப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston கடந்த வாரம் பரிந்துரைத்தார்.

இந்த முடிவை Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் ஏற்கவில்லை.

மாறாக பிரதமர் Justin Trudeau இந்த விடயம் குறித்து ஒரு பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related posts

Ontario மாகாண சபை உறுப்பினரை பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan

Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் – அதிகரிக்கும் அழுத்தம்!

Gaya Raja

Leave a Comment