தேசியம்
செய்திகள்

பொது விசாரணை அழைப்பை நிராகரிப்பதில் இணையும் எதிர்கட்சிகள்

கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து David Johnston வெளியிட்ட அறிக்கையின்  விளக்கத்தை நிராகரிப்பதில் இரண்டு எதிர்கட்சிகள் இணைகின்றன.

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக சிறப்பு அறிக்கையாளர் David Johnston நேற்று பரிந்துரைத்தார்.

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து பொது விசாரணை அவசியமில்லை என இந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டது.

Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet, Conservative தலைவர் Pierre Poilievre ஆகியோர் இந்த விடயத்தில் David Johnston வெளியிட்ட விளக்கத்தை நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையின் இரகசிய இணைப்பை மதிப்பாய்வு செய்வதற்காக, பாதுகாப்பு அனுமதிகளை பெற Justin Trudeau விடுத்த அழைப்பை இவர்கள் இருவரும் நிராகரித்து வருகின்றனர்.

இந்த அழைப்பை ஒரு பொறி என Bloc Quebecois தலைவர் விமர்சித்தார்.

தனது மதிப்பீட்டில் முக்கிய குறுக்கீடு குற்றச்சாட்டுகள், தொடர்புடைய உளவுத்துறை ஆவணங்களை எடுத்துரைக்கும் இரகசிய இணைப்பை David Johnston இணைந்திருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையுடன், பிரதமருக்கு இந்த சிறப்பு இணைப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும் அதை மறுபரிசீலனை செய்வதற்குத் தேவையான உயர் இரகசிய பாதுகாப்பு அனுமதியை அவர்கள் பெற்றிருந்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுகாதாரப் பாதுகாப்பில் மாகாணங்களுக்கு மத்திய அரசு உதவ முடியும்!

Lankathas Pathmanathan

B.C. குற்றவியல் குழுவொன்றின் 8 பேர் கைது

Lankathas Pathmanathan

நாடு கடத்தலை எதிர் கொண்ட குடும்பத்தினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment