February 22, 2025
தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு எதிராக பரிந்துரை

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston பரிந்துரைத்துள்ளார்.

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து பொது விசாரணை அவசியமில்லை என David Johnston தெரிவித்தார்.

இந்த விடயத்தில் இரண்டு மாத விசாரணைக்கு பின்னர் சிறப்பு அறிக்கையாளர் முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston செவ்வாய்க்கிழமை (23) தனது அறிக்கையை வெளியிட்டார்.

வெளிநாட்டு தலையீடு விடயத்தில் ஒரு பொது செயல்முறை தேவை என கூறிய அவர் அது ஒரு பொது விசாரணை வடிவத்தில் அமையாது என குறிப்பிட்டார்.

கனடியர்களுடன் தொடர்ச்சியான பொது உரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் David Johnston அறிவித்தார்.

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு ஏற்படுத்தும் அச்சுறுத்தல், அதை எதிர்கொள்ளும் வழிகள் குறித்து பொது உரையாடல்கள் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் உளவுத்துறை தகவல்கள் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளதாக தனது அறிக்கையில் David Johnston குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அரசாங்கங்கள் கனடாவில் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கின்றன என David Johnston தனது முதலாவது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனாலும் 2019 கனடிய தேர்தலில் சீனாவிலிருந்து நிதி குறிப்பிட்ட வேட்பாளர்களை சென்றடைந்ததை உளவுத்துறை உறுதிப்படுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.

2021 தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டின் காரணமாக குறிப்பிட்ட வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்ற முன்னாள் Conservative தலைவரின் கூற்றை ஆதரிக்கக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும் David Johnston தெரிவித்தார்.

மத்திய அரசு வெளிநாட்டு தலையீட்டை கையாண்ட விதத்தில் எந்த நெறிமுறை தவறையும் காணவில்லை எனவும் David Johnston தனதறிக்கையில் குறிப்பிட்டார்.

Related posts

பசுமை கட்சியிலிருந்தும் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகும் Annamie Paul!

Gaya Raja

10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

தொடர் கொலையாளி Robert Pickton சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment