தேசியம்
செய்திகள்

WestJet விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

WestJet விமானிகள் வேலை நிறுத்தம் இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.

WestJet விமானிகளின் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக ஒரு தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

விமானிகளுடனான இந்த ஒப்பந்தம் குறித்து WestJet தலைமை நிர்வாக அதிகாரி மகிழ்ச்சி தெரிவித்தார்.

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை WestJet விமானிகள் கடந்த திங்கட்கிழமை (15) இரவு வெளியிட்டிருந்தனர்.

ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், வேலை நிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 3 மணி முதல் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்திருந்தது.

எட்டு மாத பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் வெள்ளி அதிகாலை வேலை நிறுத்த நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக ஒரு தற்காலிக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பயணிகளின் நீண்ட வார இறுதி பயணத் திட்டங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் WestJet தனது நடவடிக்கைகளை தொடர்கிறது.

Related posts

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan

Nova Scotia: COVID சுகாதாரப் பாதுகாப்புச் சட்ட உத்தரவு நீக்கம்

Lankathas Pathmanathan

Ontario மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது ; பொது சுகாதார நடவடிக்கைகள் பலவும் நீக்கப்படும்!

Gaya Raja

Leave a Comment