காட்டுத்தீக்கு எதிரான Alberta மாகாணத்தின் போராட்டம் கோடை காலம் முழுவதும் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல மாதங்கள் ஆகலாம் என காட்டுத்தீ அதிகாரி எச்சரித்துள்ளார்.
சுமார் 2,500 தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
புதன்கிழமை (17) காலை வரை மாகாணம் முழுவதும் 96 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.
இவற்றில் வன பாதுகாப்பு பகுதிகளில் 91 தீ எரிகிறது.
27 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.
இந்த வருடம் காட்டுத்தீ காரணமாக 694,000 hectares நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
காட்டுத்தீ காரணமாக இடம்பெயர்ந்த சில குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் வரை, 19,500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.