தென் கொரியாவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (16) தலைநகர் Seoul சென்றடைந்தார்.
இரு நாடுகளும் நெருக்கமான பொருளாதார, கலாச்சார உறவுகளை கட்டியெழுப்பும் முயற்சியின் மத்தியில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இரு நாடுகளும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இணைந்து செய்யப்படும் வகையில் இந்த மூன்று நாள் பயணம் அமைகிறது.
தென் கொரியா ஏற்றுமதி, இறக்குமதியில் கனடாவின் ஏழாவது பெரிய வர்த்தக பங்காளியாகும்.
புதன்கிழமை (17) Justin Trudeau தென் கொரியா தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் Melanie Joly, தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne ஆகியோரும் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர்.
தென் கொரிய ஜனாதிபதி கடந்த இலையுதிர்காலத்தில் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு Justin Trudeau, வெள்ளிக்கிழமை (19) ஜப்பானுக்கும் பயணமாகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (22) வரை ஜப்பானின் தங்கியிருக்க உள்ள பிரதமர் அங்கு நடைபெற உள்ள G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.