தேசியம்
செய்திகள்

42 வயதான OPP அதிகாரி சூட்டுக் கொலை

Ottawaவிற்கு கிழக்கே Bourget கிராமத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான காவல்துறை அதிகாரி அடையாளம் காணப்பட்டார்.

Clarence-Rockland நகராட்சியில் உள்ள Bourget கிராமத்தில் வியாழக்கிழமை (11) அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு OPP அதிகாரி பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்.

மரணமடைந்த அதிகாரி 42 வயதான Eric Mueller என அடையாளம் காணப்பட்டார்.

அவர் Ontario மாகாண காவல்துறையில் 21 வருட அதிகாரியாக இருந்தவராவர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளில் ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த ஒரு அதிகாரி 43 வயதானவர் எனவும் அவர் 19 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் தொடர்ந்தும் Ottawa வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த இரண்டாவது அதிகாரி 35 வயதானவர் எனவும் அவர் 10 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

Related posts

TTC பேருந்து விபத்தில் 8 பேர் காயம்

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் நான்காவது கனேடியர் பலி!

Lankathas Pathmanathan

தடுப்பூசிக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில் கனடா: வைத்தியர் Edward Njoo

Gaya Raja

Leave a Comment