தேசியம்
செய்திகள்

Michael Chongக்கு எதிரான சீனாவின் பிரச்சாரம் குறித்த ஆய்வை ஆரம்பிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல்

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chongக்கு எதிரான சீனாவின் பிரச்சாரம் குறித்த ஆய்வை ஆரம்பிக்க ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதற்கு ஆதரவாக புதன்கிழமை (10) நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

Michael Chong, Hong Kongகில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு எதிராக கனடாவினால் வெளியேற்றப்பட்ட சீன தூதரினால் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் குறித்து ஒரு குழு ஆய்வு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புக் கொண்டனர்.

புதன்கிழமை கேள்வி நேரத்தின் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த பிரேரணை அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கனடிய அரசாங்கம் சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற இந்த வாரம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிப்பது குறித்து மத்திய வங்கி பரிசீலித்தது

Lankathas Pathmanathan

மிரட்டி பணம் பறித்த விசாரணையில் ஐவர் கைது!

Lankathas Pathmanathan

கனடாவுக்கு தடுப்பூசிகளை அனுப்ப முன்வரும் அமெரிக்காவுக்கு கனடிய பிரதமர் நன்றி

Gaya Raja

Leave a Comment