இணையம் மூலம் கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவைகள் எதிர்வரும் இலையுதிர் காலம் முதல் அனுமதிக்கப்படவுள்ளன.
புதிய கனேடிய கடவுச்சீட்டு வடிவமைப்பு புதன்கிழமை (10) வெளியிடப்பட்டது.
அமைச்சர்கள் Sean Fraser, Karina Gould இணைந்து Ottawa சர்வதேச விமான நிலையத்தில் புதிய கனேடிய கடவுச்சீட்டு வடிவமைப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் கனேடியர்கள் தங்கள் கடவுச்சீட்டை எதிர்வரும் இலையுதிர் காலம் முதல் இணையத்தில் புதுப்பிக்க விண்ணப்பிக்க முடியும் என குடிவரவு அமைச்சர் Sean Fraser அறிவித்தார்.