February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனேடிய தூதரின் வெளியேற்றம் ஒரு பழிவாங்கல்: பிரதமர் Trudeau

கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஒரு பழிவாங்கல் நடவடிக்கை என பிரதமர் Justin Trudeau கூறினார்.

Shanghaiயில் உள்ள கனடாவின் துணைத் தூதரகத்தின் தூதரான Jennifer Lynn Lalonde சீனாவினால் செவ்வாய்க்கிழமை (09) வெளியேற்றப்பட்டார்.

இந்த விடயத்தில் தனது அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என இன்று Justin Trudeau கூறினார்.

எமது ஜனநாயகத்தை தொடர்ந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற திங்கட்கிழமை (08) முடிவு செய்தது.

கனடிய அரசாங்கத்தின் இந்த நகர்வுக்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாயன்று கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதேவேளை கனேடிய தூதரை வெளியேற்றும் சீனாவின் நகர்வை கடுமையாக கண்டிப்பதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly செவ்வான்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனாவுக்குப் பயணம் செய்வது தொடர்பான கனடிய அரசாங்கத்தின் ஆலோசனையை மாற்றுவது குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விவாதித்து வருவதாக தெரியவருகிறது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, Hong Kongகில் உள்ள அவரது உறவினர்களை மிரட்டும் சதியில் ஈடுபட்டதாக Torontoவை தளமாகக் கொண்ட சீன தூதர் Zhao Wei மீது கனடாவின் உளவுத்துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

Related posts

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan

British Columbia, Prince Edward தீவில் தொடரும் கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

James Smith Cree முதல் குடியிருப்புக்கு அமைச்சர் Mendicino விஜயம்

Lankathas Pathmanathan

Leave a Comment