தேசியம்
செய்திகள்

சீன இராஜதந்திரிகளை வெளியேற்றுவது குறித்து ஆராயும் கனடா?

நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விடயத்தில் விளக்கமளிக்க சீனத் தூதருக்கு கனடிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வியாழக்கிழமை (04) நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த தகவலை வெளியிட்டார்.

Torontoவில் உள்ள சீன இராஜதந்திரி ஒருவர் Conservative நாடாளுமன்ற உறுப்பினர், அவரது குடும்பத்தினரை மிரட்டும் சதியில் ஈடுபட்டதாக கனடாவின் உளவுதுறையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளிக்க Liberal அரசாங்கம் சீனாவின் தூதரை வரவழைத்து உள்ளது.

கனடா தனது விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஏற்றுக்கொள்ளாது என சீனத் தூதரிடம் தெளிவுபடுத்துமாறு தனது துணை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் Melanie Joly கூறினார்.

சீனாவின் Toronto தூதரகத்தில் பணிபுரியும் இராஜதந்திரி ஒருவர் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, Hong Kongகில் உள்ள அவரது உறவினர்களை குறிவைத்ததாக கனேடிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவு நம்புவதாக வெளியான ஊடக அறிக்கைகளை Melanie Joly உறுதிப்படுத்தினார்.

இந்த விடயம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் இன்று நாடாளுமன்ற வெளியுறவு குழுவிடம் கூறினார்.

குறிப்பிட்ட இராஜதந்திரியை கனடாவில் இருந்து வெளியேற்ற அரசாங்கத்தை எதிர்க்கட்சியான Conservative கட்சி வலியுறுத்தி வருகின்றது.

இந்த விடயத்தில் இராஜதந்திரிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட அனைத்து விளைவுகளையும் ஆராய்ந்து வருவதாக Melanie Joly கூறினார்.

Related posts

தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைகிறது

Lankathas Pathmanathan

நீண்டகால COVID அறிகுறிகளுடன் 1.4 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan

விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment