35 ஆயிரம் கனடா வருமானதுறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
கனடா வருமானதுறை, தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது.
கனடா வருமானதுறை ஊழியர்கள் வியாழக்கிழமை (04) காலை 11:30 (EST) மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தொழிற்சங்கம் கூறியுள்ளது.
ஏற்கனவே 120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் கடந்த திங்கட்கிழமை தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.