December 12, 2024
தேசியம்
செய்திகள்

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

உக்ரைனில் நடைபெறும் போரில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டனர்.

கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியது..

இவர்கள் இருவரும் உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ontario மாகாணத்தை சேர்ந்த 21 வயதான Cole Zelenco, Alberta மாகாணத்தை சேர்ந்த 27 வயதான Kyle Porter ஆகியோர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் உடல்கள் இரண்டு வாரங்களில் கனடாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட நான்காவது, ஐந்தாவது கனடிய தன்னார்வ இராணுவத்தினர் இவர்கள் என நம்பப்படுகிறது.

Related posts

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றியடைந்த பிரதமர்

Lankathas Pathmanathan

March 22nd 2020 lகனடாவில் இந்த வாரத்தில் l Canada This Week

thesiyam

கனடா பல் மருத்துவ கொடுப்பனவு ஊடாக இதுவரை ஒரு இலட்சம் குழந்தைகள் பலன்

Lankathas Pathmanathan

Leave a Comment