கனேடிய இசைக் கலைஞர் Gordon Lightfoot தனது 84 வயதில் காலமானார்.
அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (01) இதனை உறுதிப்படுத்தினர்.
Gordon Lightfoot பழம்பெரும் கனேடிய பாடகரும் பாடலாசிரியருமாவார்.
அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த மாத நடுப்பகுதியில், Gordon Lightfoot தனது உடல்நிலை காரணமாக 2023இல் திட்டமிடப்பட்ட அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் இரத்து செய்திருந்தார்.