வெள்ளிக்கிழமை (28) வரை 375 க்கும் மேற்பட்ட கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர்
வடகிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில் சண்டை தொடர்வதால், குறைந்தது ஒரு விமானம் சனிக்கிழமை (29) அங்கிருந்து வெளியேற திட்டமிடப்பட்டுள்ளதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனேடியர்களை சூடானில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் குறித்து குடிவரவு, பாதுகாப்புத் துறைகளின் மத்திய அதிகாரிகள் சனிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் சந்திப்பை முன்னெடுத்தனர்.
சூடானில் இருந்து வெளியேறிய கனடியர்களின் எண்ணிக்கையில் நட்பு நாடுகளின் விமானங்களில் பயணித்தவர்களும் அடங்குகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரண்டு கனடிய விமானங்கள் சூடானில் இருந்து புறப்பட்டதை செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தினார்
இதில் 68 கனேடியர்கள், ஆறு நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட 221 பேர் பயணித்தனர்.