அரசு ஊழியர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் கனடிய அரசாங்கம் முட்டுக்கட்டையிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் தலைவர் Chris Aylward இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கருவூல வாரிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டையிடுவதாக அவர் புதன்கிழமை (26) கூறினார்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் Justin Trudeau ஈடுபட வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமரினால் மாத்திரம் இந்த சர்ச்சையை தீர்க்க உதவ முடியும் எனவும் Chris Aylward நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.