கருவூல வாரியத் தலைவர் Mona Fortier, கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் ஆகியோர் ஒப்பந்தப் பேச்சுக்களின் தாமதம் குறித்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
கனடாவின் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (23) ஐந்தாவது நாளாக தொடர்கிறது.
கடந்த வியாழக்கிழமை (20) இரவு முன்வைக்கப்பட்ட புதிய சலுகைக்கு மத்திய அரசு பதிலளிக்கத் தவறியதாக பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் Chris Aylward குற்றம் சாட்டினார்.
ஆனாலும் வெள்ளிக்கிழமை (21) சந்திப்பதற்கான கோரிக்கைக்கு பொதுச் சேவை ஊழியர் சங்கம் பதிலளிக்கவில்லை எனவும் சனிக்கிழமை (22) பிற்பகல் திட்டமிடப்பட்ட கூட்டத்தை இரத்து செய்ததாகவும் கருவூல வாரியத் தலைவர் Mona Fortier தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விடையத்தில் பிரதமர் Justin Trudeau தலையிட வேண்டும் என பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் Chris Aylward அழைப்பு விடுத்துள்ளார்.