சட்டவிரோத மருந்துகளால் British Colombia மாகாணத்தில் பலியாகும் முதற்குடியினர் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
British Colombia மாகாணத்தில் முதற்குடியினர் சமூகத்தில் சட்டவிரோத மருந்துகளால் கடந்த ஆண்டு 373 பேர் மரணமடைந்தனர்.
இது சட்டவிரோத மருந்துகளால் British Colombia மாகாணத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில் 16.4 சதவீதமாகும்.
ஆனாலும் British Colombia மாகாணத்தின் மக்கள் தொகையில் 3.3 சதவீதம் மட்டுமே முதற்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சட்டவிரோத மருந்துகளால் முதற்குடியினர் சமூகத்தினர் பொது மக்களை விட 5.9 மடங்கு அதிகமாக மரணமடைகின்றனர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
சட்டவிரோத மருந்துகளால் ஏற்படும் மரணம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் British Colombiaவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது.
அன்றில் இருந்து குறைந்தது 11 ஆயிரத்து 807 பேர் சட்டவிரோத மருந்துகளால் British Colombiaவில் பலியாகியுள்ளனர்.